நாணயம் என்பது எண்ணம், சொல், செயல் ஆகிய இம்மூன்றும் எப்போதும் ஒன்றாகவே இருக்க வேண்டும். அது நேர்மையானதாகவும், தவறற்றதாகவும் இருக்க வேண்டும். மேலும் அறம், ஒழுக்கம், உண்மை, நேர்மை, பொறுமை, நம்பிக்கை, விடாமுயற்சி, தைரியம், துணிவு, பணிவு, உழைப்பு, திறமை, நேரம், பணம், அன்பு, நட்பு, உறவு, உதவி, நன்றி, சிந்தனை, மனசாட்சி, செல்வாக்கு, கடமை, கண்ணியம், மரியாதை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
எவரிடமும் பொய்பேசாமலும், யாரையும் ஏமாற்றாமலும், யாரையும் புறம்பேசாமலும், பிறர் மனம் துன்பப்படுத்தாமலும், நாணயமுடன் பழகும் எண்ணம் வேண்டும்.
நாணயமுடன் பணம் சம்பாதிக்கும் வழிகளை கற்கும் எண்ணம் வேண்டும்.
உடல் ஆரோக்கியத்தை காக்க கற்கும் எண்ணம் வேண்டும்.
நேர நிர்வாகம் செய்ய கற்கும் எண்ணம் வேண்டும்.
பணம் செலவுசெய்வதை குறைக்க கற்கும் எண்ணம் வேண்டும்.
கடன் வாங்குவதை தவிர்க்கும் எண்ணம் வேண்டும்.
சேமிப்பு செய்யும் எண்ணம் வேண்டும்.
முதலில் சேமிப்பு, பிறகு செலவு செய்வதை திட்டமிடும் எண்ணம் வேண்டும்.
சேமிப்பை முதலீடாக உருவாக்கும் எண்ணம் வேண்டும்.
சேமிப்பு மற்றும் முதலீட்டில் லாபம் வரவைக்கும் எண்ணம் வேண்டும்.
நிரந்தர வருமானம் வரும் வழியை உருவாக்கும் எண்ணம் வேண்டும்.
சேமிப்பு மற்றும் முதலீட்டு பணத்தை வளர்க்க கற்கும் எண்ணம் வேண்டும். அது இன்றுமுதல் வரும் இருபதுவருடத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் நாணயமுடன் பணத்தை வளர்க்க கற்கும் எண்ணமாக இருக்க வேண்டும்.
பணக்காரராக வாழ்தலை உறுதி ஏற்கும் எண்ணம் வேண்டும்.
நாணயமுள்ளவர்கள் மற்றும் தொழில் திறமை படைத்தவர்களிடம் மட்டும் நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கும் எண்ணம் வேண்டும்.
நாணயமுள்ளவர்கள் மற்றும் எந்த சூழ்நிலையிலும் உங்களுடன் துணையாகவும், விட்டு போகாதவர்களிடம் மட்டும் நட்பாக பழகும் எண்ணம் வேண்டும்.
தன்னுடன் நட்பாக பழகுபவர்கள் பிரச்சனையில் உள்ள போது, அவர்கள் உதவி கேட்பதற்கு முன்பு, தானாக பிரச்சனையை உணர்ந்து தன்னால் முடிந்த உதவியை தானாகவே செய்ய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அவர்களை நிராகரிக்கக் கூடாது. அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் எண்ணம் வேண்டும்.
தனக்கு ஆபத்தில் உதவியவர்களுக்கு நன்றி உணர்வோடு எப்பொழுதும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் எண்ணம் வேண்டும்.
குறைந்தபட்சம் இருபது வருடங்களுக்குமேல் திட்டமிட்ட எண்ணங்களின் படி வாழ்க்கை வாழும் எண்ணம் வேண்டும்.
அது வறுமையாலும் ஏழ்மையாலும் தினக்கூலியாக இருந்தாலும் கூட இந்த திட்டமிட்ட எண்ணங்களின்படி வாழ்ந்தால்தாங்கள் உறுதியாக நாணயமுடன் கோடிக்கணக்கான செல்வத்தை உருவாக்கும் மனிதராக நீங்கள் உருவாவீர்கள்.
அன்புள்ள
E. Pushparajan
Richmanmaker
EPR Group Company
● Provide services Residential and Commercial Properties